இலங்கையை விமர்சித்தது சுவிஸ்

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பில் சுவிஸ் மத்திய வெளிவிவகார திணைக்களம் விமர்சனம் வெளியிட்டுள்ளது.

குறித்த ஊழியர் பொய்யான ஆதாரங்களை உருவாக்க முயன்ற குற்றம்சாட்டில் சிஐடியால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (16) இரவு சுவிஸ் மத்திய வெளிவிவார திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலையே இதனை தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும்,

பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றும் சுவிஸ் தூதரகம் இரண்டும் இலங்கை அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைத்தது.

பலமுறை உரிய செயல்முறையை பின்பற்ற வேண்டும் என கூறிய போதிலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது 30 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதையும், விசாரணை முடிவடைய முன்னர் அவர் தொடர்பில் கேள்விக்கு உட்படுத்திய இலங்கையின் மூத்த அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகளை விமர்சிக்கிறோம்.

ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்கச் செயற்பட வேண்டும், ஊழியரின் உரிமைகளை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

பொருத்தமான சட்டத்தின் கீழ் தமது கடமைகளை செய்யவும், ஊழியரின் உடல் நிலை குறித்து உரிய கவனம் செலுத்தவும் இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். நாம் மற்றும் எமது தூதரகம் முடிந்தவரை எமது ஊழியருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும். - என்றுள்ளது.

No comments