தூதரக ஊழியர் கடத்தல் விசாரணையில் திருப்பம்

சுவிஸ் தூதர ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்கள் பாதிக்கப்பட்டவரின் உண்மையான நடவடிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று (01) இரவு அறிவித்துள்ளது.

நேற்று மாலை சுவிஸ் தூதுவர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இவை வெளிப்படுத்தப்பட்டது என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

அதில் மேலும்,

ஊபர், சிசிடிவி காட்சிகள், தொலைபேசி அழைப்புக்கள், ஜிபிஎஸ் தகவல்களை வைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக கடத்தப்பட்டதாக கூறப்படும் பாதிக்கப்பட்ட நபரை சட்ட அமுலாக்க அதிகாரிகளினால் நேர்காணல் காணப்பட வேண்டும்.

கடத்தலின் போது காயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் நபர் கூறுவதால் அவரை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு ஆஜர்ப்படுத்த வேண்டும் - என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments