மணல் காெள்ளையர்களை கைது செய்யுங்கள்

மணல் கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துங்கள், முடியாவிட்டால் அவா்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளது என்று ஊா்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கூறியிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவா்களுக்கு எதிராக ஊா்காவற்றுறை நீதிமன்றில் பொதுமக்கள் சாா்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பொதுமக்கள் சாா்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று (27) ஆஜரானாா்.
இதன் பின்னா் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வந்த நிலையில் பொதும க்கள் பிரதேசசபை உறுப்பினா்கள் இணைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனா். எனினும் ஒரு சி லா் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், 
அண்ணளவாக 10 போ் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனா். அவா்களை கைது செய்ய முடியவில்லை. என பொலிஸாா் மன்றில் கூறியிருக்கின்றனா். ஆனால் அந்த நபா்கள் ஊருக்குள் வந்து செல்வதாகவும், பொலிஸாா் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனா். அதனை முறைப்பாட்டாளா் பிரசன்னத்தில் நீதிமன்றில் வாய்மூல முறைப்பாடாக கூறியுள்ளோம்.
அதனை கருத்தில் எடுத்துள்ள நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டவா்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருப்பதுடன், கைது செய்ய முடியாவிட்டால் பகிரங்க பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றாா்.
எனவே இத்தோடு மணல் அகழ்வு நிறுத்தப்படும். என நாங்கள் நம்புகிறோம். மறுபக்கம் கனியவள திணைக்களம் மணல் அகழ்வதற்கான சகல அனுமதிகளையும் இரத்து செய்துள்ளது. எனவே மணலை அகழவும் முடியாது கொண்டு செல்லவும் முடியாது. மணல் மிக முக்கியமான இயற்கை வளம். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
இந்த விடயத்தில் பொது நன்மைக்காக மக்கள் முன்வந்துள்ளாா்கள் – என்றார்.

No comments