ராஜிதவுக்கு மறியல்

நாரஹன்பிட்டிய வைத்தியசாலையில் சிஐடியால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை வைத்திய சாலையில் பார்வையிட்ட கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சாலினி பெரேரா, 30ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க சற்றுமுன் உத்தரவிட்டார்.

முன்னதாக ராஜித சேனாரத்னவின் உடல் நிலை அறிக்கையை பெற்று அதன்படி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு சிஐடியினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி வைத்திய சாலையில் ராஜிதவை பார்வையிட்ட பின்னர் நீதிபதி விளக்கமறியலில் வைக்கும் முடிவை அறிவித்துள்ளார்.

No comments