மின்சாரம் தாக்கி பல்கலை மாணவன் பலி!

கிளிநொச்சி - சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னராசா சாரங்கன் (22-வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள குறித்த இளைஞனின் தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரிசி ஆலையிலுள்ள  பகுதி ஒன்றில் வெள்ள நீர் காணப்பட்டுள்ளது. குறித்த வெள்ள நீரை மோட்டார் ஊடாக இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின் தாக்கத்திற்கு உள்ளான குறித்த இளைஞனை மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

No comments