தூதரக அதிகாரி கடத்தல்; அறிக்கை வெளியிட்டது ம.உ.ஆ

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எழுதிய கடிதத்தில், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு அதன் தலைவர் தீபிகா உடகம அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

சட்டத்தை அமல்படுத்துவதில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், அச்ச சூழ்நிலையை போக்கவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கு விரைவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த வேண்டும்.

கடத்தப்பட்ட இளம் பெண்ணின் சார்பாக நீதி பெறப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் தேவையும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உண்டு - என்றுள்ளது.

No comments