Header Shelvazug

http://shelvazug.com/

புலிப்பாடலா? துரத்துகின்றது காவல்துறை!


தேர்தல் காலத்தில் விடுதலைப்புலிகளது புரட்சிகர பாடலை ஒலி பரப்பி வாக்கு கேட்ட காலம் கடந்து தற்போது புலிப்பாடல்களை ஒலிபரப்புவர்களை இலங்கை காவல்துறை தேடிவருகின்றது.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பெரும் சத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது யாழ் நகர் பகுதியில் இரவு வேளை இயங்கும் உணவகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த எவரோ காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து யாழப்பாண காவல்துறையினர்; சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

இருப்பினும் அவ்வாறான பாடல் எங்கும் ஒலிக்கப்படாததால் ஏமாற்றத்துடன்; திரும்பிச் சென்றுள்ளனர்.

No comments