மதுப்பிரியர்களுக்கு சோகச் செய்தி

மதுபானம் மற்றும் சிகரட் வகைகளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி எட்டு வீதத்தினால் குறைக்கப்பட்ட போதிலும் அது மதுபானம் மற்றும் புகையிலை உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments