கோத்தா சிபார்சில் பிரியங்காவிற்கு பதவி!


பிரிட்டிஸ்  நீதிமன்றினால் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க இலங்கை இராணுவத்தின் காணி மற்றும் விடுதி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே அவர் புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பிரித்தானிய நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவராக இருந்த நிலையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவரது பதவியேற்பு வடகிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கும் முயற்சியை முற்றாக இடைநிறுத்தும் நகர்வென அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

No comments