யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்?

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (10) அவருக்கு இதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் அவர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.

அதேபோன்று யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ம.பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக சேவையாற்றி முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமை பொறுப்பேற்று குறுகிய காலத்தில் அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது இடம்பெறும் மணல் கடத்தலின் மாபியாக்களினதும், அது சார்ந்த அரசியல்க் கட்சி ஒன்றின் இயலாமையுமே யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் இடமாற்றத்துக் காணரமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலராக பணியாற்றிய போது மணற் கடத்தல்க்கார்ர்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments