இரு தேச ஆதரவு இலங்கைக்கு அல்ல

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேற்றிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை என அக்கட்சியின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பாக இன்று டுவிட்டர் கருத்து தெரிவித்துள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி பிரதி தலைவர், “இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேற்றிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை.

நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இரு மாநிலம் தொடர்பான கூற்று மத்திய கிழக்கு நாடுகளுடன் மட்டுமே தொடர்புடையது” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமை பாரிய அச்சுறுத்தலாகும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments