அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்க 4 ஆண்டுகள் ரஷ்யாவுக்கு தடை!

ஊக்க மருந்துக்கு எதிரான அனைத்துலக இயக்கம்  ரஷ்யா அனைத்துலக விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜப்பானில் நடைபெறும்  ஒலிம்பிக் போட்டி மற்றும் 2022ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, 2022ஆம்ஆண்டு கத்தாரில் இடம்பெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க ரஷ்யாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்துக்கு எதிரான விதிமுறைகளை ரஷ்ய அமைப்பு பின்பற்றவில்லை என்பதற்காக ரஷ்யா மீது  தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டாளர்கள் ஊக்க மருந்து உட்கொண்டார்களா என்பதைத் தீர்மானிக்கும் ஆய்வகச் சோதனைகளில் ரஷ்யா முறைகேடு புரிந்தது நிரூபிக்கப்பட்டது.
ரஷ்ய விளையாட்டாளர்கள் ஊக்கு மருந்து உட்கொண்டதை நிரூபிக்கும் ஆய்வக முடிவுகள் அடங்கிய ஆவணத்தை ரஷ்யா அழித்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டது.
அதனையடுத்து, உலகின் முக்கியப் போட்டிகளில் ரஷ்யாவுக்குத் தடை விதிக்கும் பரிந்துரை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments