ராஜிதவுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு




நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பில் அறிக்கையொன்று வௌிடப்படவுள்ளது.
ராஜித சேனாரத்னவின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்காக அவர் சிகிச்சை பெற்றுவரும் நாராஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு, சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி நேற்று (28) முற்பகல் சென்றிருந்தார்.
ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பான முழுமையான அறிக்கை வைத்திய அதிகாரியால் வௌியிடப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சருக்கு சிகிச்சையளிக்கும் விசேட மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே அந்த அறிக்கை வௌியிடப்படவுள்ளது.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ராஜித சேனாரத்னவைத் தேசிய வைத்தியசாலை அல்லது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பாதுகாப்பிற்காக 4 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைக்காவலர், சார்ஜன்ட் மற்றும் ஆயுதங்களுடன் இரு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments