வறுமையில் வாடும் வர்மன் குடும்பம்?


யுத்தகாலத்தில் ஊடகவியலாளராக பணிபுரிந்த வேளை இனம் தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் தாயார் செல்வராசா இந்திராதேவி சிறு குடிசையில் வாழ்ந்து வருகின்றார்.
அவரின் வீட்டை புனரமைக்க சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் அவர்களினால் மைக்கல் நேசக்கரம் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது
அதற்கு அமைவாக  ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணியளவில் அவர்களின் வீட்டை புனரமைக்க கரவெட்டி தில்லையம்பலப்பிள்ளையார் நற்பணி மன்றம் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 50,000 வழங்கி வைக்கப்பட்டது.

No comments