ஒரு குடும்பத்தை பலியெடுத்த மண் சரிவு

நுவரெலியா - வலப்பனையில் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, தாய், தந்தை, மகள் உள்ளிட்ட மூவரே பலியாகினர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments