கோத்தா அலுவகத்துடனேயே இருக்கட்டும்:ஜதேக!


கோத்தபாய அரசு 2000 மில்லியன் சேமித்திருப்பதாக பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்க ஜக்கிய தேசியக்கட்சியோ அதனை கேலிக்குள்ளாக்கியுள்ளது.

அனுராதபுராவில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்ச குடும்பத்தினர் செல்வதற்கு மொத்தமாக ஏழு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதேபோன்று அண்மையில் ஹம்பாந்தோட்டையில்; நடைபெற்ற சிராந்தி ராஜபக்சவின் முன்பள்ளி விழாவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, அமைச்சர் சமல் ராஜபக்ச,சிராந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ததாகவும் இதற்காக 4 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது அலுவலகத்துக்கு 30 மில்லியன் ரூபாவுக்கு தளபாடங்களை வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே கோத்தபாய ராஜபக்சவின் அரச அலுவலகங்கங்களுக்கான விஜயங்களையும் கிண்டலடித்துள்ள ஜதேகவினர். மாற்றங்களை கொண்டுவருவதற்கு அலுவலகங்களுக்கு சொல்லவேண்டியதில்லை என்றும் உயர்மட்டத்தில் இருந்து மாற்றங்கள் வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments