காணாமல் போனோரது உறவுகள் குறித்து நடவடிக்கை; டக்ளஸின் நீலிக் கண்ணீர்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் முன்வைக்கும்  நியாயமான கோரிக்கைளை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் மிக விரைவில் அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலையும் கட்டியெழுப்பப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நுற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் சந்தித்து அவர்களது உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பில் தெரிவய்படுத்தியிருந்தனர்.

உறவுகளின் வலிகளை கேட்டறிந்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்ககையில்,

நாட்டில் நடைபெற்ற அழிவு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலரின் நிலைமைகள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படாதுள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவர்களது உறவுகள் வீதிகளில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

இந்த உறவுகளின் கண்ணீருக்கும் அவர்களது கோரிக்கைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முண்டுகொடுத்து வந்த நல்லாட்சி அரசு எதுவித தீர்வுகளும் பெற்றுக்கொடுக்காது தமது சுயநல அரசியலுக்காக அவர்களது உணர்வுகளையும் போராட்டத்தையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்..

கடந்த 5 வருடங்களாக நல்லாட்சி அரசை தமது சுயனலன்களுக்காக தாங்கிப்பிடித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பிரச்சினைக்கு இலகுவாக தீர்வுகளை கண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் இந்த பிரச்சினையை தீராப்பிரச்சினையாக வைத்திருக்க வேண்டும் என்றே காலத்தை கடத்தி வந்திருந்தனர்.

ஆனால் நாம் உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு உண்மைகளை கண்டறிந்து கொடுக்க வேண்டும் என்பதிலும் அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதிலும் கடந்த எமது ஆட்சியிலும் சரி அதன் பின்னர் வந்த நல்லாட்சியிலும் சரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

காணாமல் போன உறவுகளின் உணர்வுகளை நானும் அனுபவித்தவன் என்ற ரீதியில் அவர்களுக்கான பரிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கும் இருக்கின்றது.

அந்தவகையில் தான் நான் தற்போதைய அரசின் அமைச்சர் என்ற வகையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி வீதிகளில் போராடும் உறவுகளை அழைத்து அவர்களது நியாயமான கோரிக்கைகளை தனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களின் ஒத்துழைப்பை கோருகின்றேன்.

அதற்கு இன்று நீங்கள் ஆதரவு தந்துள்ளதால் நிச்சயமாக வெகு விரைவில் உங்களது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் பரிகாரங்களை பெற்றுக் கொடுக்க நான் ஏற்பாடுகளை செய்வேன் என்றார்.

No comments