கோத்தா வருகையால் "காவல் துறை" ஆக மாறிய பொலிஸ் நிலையம்

வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் புதிய ஜனாதிபதி கோத்தாபயவின் வருகையை அடுத்து காவல்துறையாக மாற்றம் அடைந்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இவ்வாறு  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில் காவல்துறை என்ற தமிழ் மொழியிலான பெயர்ப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.

No comments