மணல் அகழ்வை தடுக்க டக்ளஸ் களத்தில்!


யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த டக்ளஸ் தேவானந்தாவே களமிறங்கும் நிலை யாழ்ப்பாணத்தில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான விசேட கூட்டம் இன்று புதிய அரசின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இற்று காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் ஆரம்பமான குறித்த ஆராய்வு கூட்டத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள சட்டவிரோத மண்ணகழ்வு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, வாள்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடமராட்சி கிழக்கு மற்றும் தீவகமுள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஈபிடிபி மீதே கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

No comments