குற்றச்செயல்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு!


யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணம் தொடர்புடையவர்களை காவல்துறை காப்பாற்றுவதேயென பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். 

அரியாலையில் கடமையிலுள்ள அனைத்து பொலிஸாரையும் உடனடியாகஇடமாற்றம் செய்யுங்கள் . பொலிஸாருக்கும் மணல் கடத்தல்காரர்களுக்கும் இடையில் நெருக்கம் உள்ளதென சட்டத்தரணி ரெமிடியஸ் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் ,வீடுகளிற்குள் புகுந்து அட்டகாசம் புரிபவர்களையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் முற்;படுத்துங்கள் எனவும் இன்;று காலை 10 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் பிரபல சட்டத்தரணி ஒருவர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

No comments