யாழில் பொலிஸ் அதிகாரி மரணம்! விசாரணை ஆரம்பம்

மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காமினி என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இரவு நேரக் கடமைக்காக பொலிஸ் உத்தியோகத்தர் சென்றிருந்தார். அவர் அங்கு நள்ளிரவு உறக்கத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும் நேற்று (30) காலை அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார.

No comments