ஹெரோயினுடன் சிக்கிய இருவர்

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பேருந்தில் ஹெரோயின் கடத்திய இருவரை பொலிஸார் நேற்று (16) இரவு கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் பகுதியில் வைத்து இந்த நபர்களை 988 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸார் கைது செய்தனர்.

இதன்போது ஏறாவூர் பகுதியை சேர்ந்த 30 மற்றும் 20 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments