ரிஷாட் - ஹக்கீம் இரத்தம் உறிஞ்சும் அட்டை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டும் எமது மக்களின் இரத்தத்தினை உறுஞ்சும் அட்டைகள் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் நிலவரம் மற்றும் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று (11) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக வலம் வந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டும் எமது மக்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டும்;, அதிகார மமதையில், சொகுசு கதிரைகளை அலங்கரித்தார்களே தவிர, பெயர் சொல்லும் வகையில் மக்களுக்கு சேவையினையாற்ற முனையவுமில்லை, முன்வர முடியவுமில்லை. இவர்களால் மேடைகளில் முழங்கியவைகளும், கொடுத்தவாக்குறுதிகளும், நாட்டிய அடிக்கற்களும் வெறுமனே கண்துடைப்புக்களுக்காக சோடிக்கப்பட்டு நடிக்கப்பட்ட நாடகங்களாகும்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் களத்தில், மதவாதம், இனவாதம் கொண்ட கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு, எமது மக்களை வாக்களிக்க வேண்டாமென மேடைகளில் விலாசித் தள்ளிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டும் எல்லோரையும் விட அதிகமான வார்த்தைப் பிரயோகங்களால் மதவாதத்தையும்;, இனவாதத்தையும், முஸ்லீம்களிடத்தில் கக்கி, துவேசத்தினை விதைத்து அன்னக்கட்சிக்கு வாக்குப் பெற்றதை மறந்து விட முடியாது.

“எங்களது மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம்” என்ற போர்வையில், ஜக்கிய இலங்கைக்குள் பேதங்களையும், குரோதங்களையும் உருவாக்கியவர்கள் என்ற பட்டியலின் முன் வரிசையில் இவர்களே இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. இன்று பெரும்பான்மை இன சமூகம் முஸ்லீம்களை வேறு கண் கொண்டு பார்ப்பதற்கு, இவர்களது வெறுப்பு பிரச்சாரங்களே மிக முக்கிய காரணிகளாக அமைந்தது எனலாம்.

இன்றும் கூட, நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலையும், அதே பாணியில் எடுத்துச் செல்ல தயாராகி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்; ரிசாட்டும் யானையின் கூட்டினை வெற்றிபெறச் செய்வோம். சஜித் பிரேமதாசாவினை பிரதமராக்குவோம் என நடக்காததைச் சொல்லி மறுபடியும் எமது மக்களை முட்டாளாக்கி, இப்பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் இவர்களே தெரிவாகி, பாராளுமன்ற எதிர்க்கட்சி ஆசனத்தில் உறுப்பினராக அமர்ந்து கொண்டு, அவர்களது சொகுசு வாழ்க்கையினை உறுதிப்படுத்திக் கொள்ளவே, இப்புதிய திட்டத்துடன் மக்கள் மத்தியில் வந்து, கரடு முரடான அலப்பறைகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில், நாஹ_ர் ஈ.எம்.ஹனிபாவின் இஸ்லாமிய கீதங்கள் சிலதை காட்சிப்படுத்தியும், சினிமாப் படங்கள் சிலதை திரையிட்டும், இது தான் பெருநாள் என ஒரு சலசலப்பை சக்தி தொலைக்காட்சியில் காட்டுவதுபோல், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டும் எமது மக்களை கவர, ஒரு சலசலப்பை காட்டி, மக்களது வாக்குகளை கொள்ளையடித்து விட்டு மறைந்து விடுவார்கள். பின்னர் வேறு ஏதாவது தேர்தல்கள்; வரும் போது மீண்டும் இவர்களும் வருவார்கள். இப்படித்தான் இவர்கள் எமது சமுகத்துக்கு தொடர்ந்தும் பூச்சாண்டியை காட்டி வருகின்றார்கள்.

எமது சமுகத்துக்கான அபிவிருத்தியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டினதும் பாணியில் கூறுவதாயின் சிங்களத்தில் அபியும், தமிழில் விருத்தியுமாகவே கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்னக் கட்சிக் கூட்டணி பெற்ற 55 லட்சம் வாக்குகளையும், மொட்டுக் கட்சிக் கூட்டணிபெற்ற 69 லட்சம் வாக்குகளையும், மாவட்ட ரீதியாக கிடைத்த வாக்குகளின் பிரகாரம் கணக்கிடுவோமாயின், மொட்டுக் கட்சிக் கூட்டணி ஆகக் குறைந்தது 130 ஆசனங்களை பெற்றதாக கணக்கிட முடியும்.

நடைபெற இருக்கும், பாராளுமன்றத் தேர்தலில் 130க்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று மொட்டுக் கட்சியின் கூட்டணி; ஆட்சியமைப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் இம்மொட்டுக் கட்சியின் கூட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டும் முயற்சித்தாலும் தங்க முடியாது என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட உண்மையாகும். எனவே மொட்டுக் கட்சியின் கூட்டணியில்; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டும் எந்தக் காரணத்தினைக் கொண்டும் சேர்க்கப்படமாட்டார்கள் என்பது சகலரும் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும்.

இந்நிலையில் யாணைக் கூட்டினால் ஆட்சி மாற்றத்தினை நாங்கள் கொண்டு வருவோம் எனமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட்டும் அவர்களது அடிவருடிகளும், இவ்வாறு மக்களை ஏமாற்றி அம்மக்;களின் வாக்குகளை கொள்ளையடித்து, பாராளுமன்றில் எதிர்க் கட்சியில் அமர்ந்து கொள்ள முயற்சிப்பதினால் எந்தப் பிரயோசனமும் எமது சமுகத்துக்கு கிடையாது. இதற்கு காரணம் ஏற்கனவே ஆளும் கட்சியில் அதிகாரமுள்ள கெபினட் அமைச்சர்களாக இருந்த காலத்திலும், எமது சமுகத்துக்கு எதுவுமே செய்யாதவர்களாவே இவர்கள் காணப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்க ஒரு அம்சமாகும்.

ஆனால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் கண்டி மாவட்டமும், அவரது கலகெதர தொகுதியும் அன்னக் கட்சிக்கு வாக்களித்ததில் பாரிய பின்னடைவினை கண்டுள்ளதை தேர்தல் களமானது சுட்டிக் காட்டுகின்றது.

இந்நிலையில் நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதை தவிர்க்கும் வகையிலும், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை அல்லது திருகோணமலையில் களமிறங்கும் வகையிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் செயற்பாடுகள் சில சைகைகளை வெளிப்படுத்துகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நாம் பல விடயங்களைப் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. நாம் ஏற்கனவே கிழக்கு மக்களின் அதிகமான ஆதிக்கத்தினை கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினை ஹக்கீமுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளோம். கட்சியின் தலைமைத்துவத்தினையும்  ஹக்கீமுக்கு தாரை வார்த்துக்  கொடுத்துள்ளோம்;. கிழக்குக்கு சொந்தமான கெபினட் அமைச்சினையும் ஹக்கீமுக்கு தாரை வார்த்துக்  கொடுத்துள்ளோம்;. இவ்வாறு ஹக்கீமுக்கு சகலதையும் தாரை வார்த்துக் கொடுத்த கிழக்கு மக்களுக்கு ஹக்கீம் பதிலுக்கு எதனைச் செய்து சாதனை படைத்தார் என்பதற்காக இன்று கிழக்குக்கு சொந்தமான பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தையும் ஹக்கீமுக்கு நாம் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்? என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள், இவ்வளவு காலமும் எமது மக்களின் வரப்பிரசாதங்களை ஹக்கீமுக்கு விட்டுக் கொடுத்தது போதாதா? இனியாவது எம்மை நாமே ஆள வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரக் கூடாதா? என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலமிது, ஒரு போதும் ஆட்டம் காணாத ஆட்சி மாற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. மொட்டுக் கட்சியின் கூட்டின் அமைச்சரவையில் நாமும் பங்கு கொள்ள வேண்டுமாக இருந்தால் கிழக்குக்காக ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுக்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால், மொட்டுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கின்ற, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர்களை நாம் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போது தான் 19 வருடங்களாக நாம் இழந்தவைகளையும், மர்ஹ{ம் அஷ்ரபினது கனவுகளையும், அடைய முடியும்; என்பது புத்திஜீவிகள், கல்விமான்கள் போன்ற சகலரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த பாதையாக இப்புதிய வியூகம் காணப்படுகிறது என்பது ஒரு தெளிவான உண்மையாகும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

No comments