திருமலையிலும் மக்கள் அவதி

திருகோணமலை மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 734 பேரும், 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுதாஸ் தெரிவித்தார்.
மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்தங்கள் தொடர்பாக இன்று (06) கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 282பேர் உறவினர்களின் வீட்டில் தங்கி இருப்பதாகவும் வெருகல் பிரதேசத்தில் தற்காலிக முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் 8குடும்பங்களைச் சேர்ந்த 33பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

No comments