43 ஆண்டுகளின் பின் நியமிக்கப்பட்டுள்ள புது பிரதமர்!

கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுப்பயணத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அவரை அந்நாட்டு அதிபர் மிகுவல் தியாஸ்-கேனல் பிரதமராக நியமனம் செய்துள்ளார்.
கியூபாவில், 1976ஆம் ஆண்டு பிரதமருக்கான பதவி நீக்கப்பட்டது. புரட்சிகரத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவால் அந்தப் பதவி அகற்றப்பட்டது.
இவ்வாண்டு அரசியலமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து பிரதமருக்கான பதவி மீண்டும் நடப்பிற்குக் கொண்டு வரப்பட்டது.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியும் ராணுவமும் அங்கு முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகக் கருதப்படுவதே அதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments