சீனாவோடு உடன்பாடு உலக கவனத்தை ஈர்த்துள்ளது;

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டியிருப்பதாக  அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டிற்கான முதல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறியுள்ளார்.

உலகின் இரண்டு மிகப் பெரிய நாடுகள் வர்த்தகப் பூசலை நிறைவுக்குக் கொண்டு வந்து  ஒரு இணக்கமான வர்த்தக ஒப்பந்தம் அமைவது உலக அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒப்பந்தத்தின் கீழ், சீனப் பொருட்கள் சிலவற்றின் மீதான வரிகளை அமெரிக்கா குறைத்துக்கொள்ளும்; அதற்கு ஈடாக, சீனா, அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை மேலும் அதிக அளவில் வாங்கிக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments