இனிமேல் நான் பேசப்போறதே இல்லை!

நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், சின்ன வயதில்  கமல்ஹாசன் போஸ்டர் மீது சாணி அடித்திகிறேன் என்று கூறினார். இதனால் கமலஹாசன் ரசிகர்கள் குழம்பியதால் அதற்கு கமல்ஹாசனிடம் லாரன்ஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஏன் அவ்வாறு கூறினேன் என்பதற்கும் விளக்கம் அளித்தார்.  மற்றும் நாம்தமிழர் கட்சி சீமான் மீதும் கடும் விமர்சனங்களையும் சவால்களையும் விடுத்திருந்தார் , பின்னர் ரஜினியின் பிறந்தநாள் விழாவிலும் சீமான் மீது கடும் விமர்சனங்களையும் வைத்திருந்தார்  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இணையத்தில்  பெரும் விவாதங்களையும் லாரன்ஸ் மீது நாம்தமிழர் கட்சி ஆதரவாளார்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வந்தனர்.

இந்நிலையில், " இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்பந்தமில்லை" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," தர்பார் இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னைப் பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி  கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாகப் பேட்டி கொடுப்பேன்.

நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே.  என்னுடைய கருத்துகளுக்குத் தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  ரஜினி சார் சொல்லித் தான் நான் பேசுவதாகச் சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம்.  நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான்.  நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை. நான் என் சேவையைச் செய்கிறேன். ஜல்லிக்கட்டால் தேவையில்லாத பிரச்சனைக்குக் கொண்டு செல்லப்பட்டேன்." என்று பதிவிட்டுள்ளார்.
 

No comments