ஜனாதிபதி செயலகத்திலிருந்து 500பேர் அதிரடியாக வெளியேற்றம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்திட்டங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவியேற்றதில் இருந்து கோத்தபாய பல்வேறு அரச நிர்வாகங்களில் மாற்றங்களை ஏற்படுத்திவருகின்ற நிலையில் தன்னுடைய செயலக பணியாளர்களையும் வெளியேற்றியுள்ளார் ,வெளியேற்றப்பட்டவர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் என்பது  குறிப்பிடத்தக்கது.

No comments