டக்ளஸ் தமிழ்நாடு போகின்றார்?


இந்தியாவில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள குடியுரிமை பிரச்சினை பற்றி வாய் திறக்க மறுத்துள்ள டக்ளஸ் தேவானந்தா இதனிடையே தமிழ் நாட்டிற்கு தான் விரைவில் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேவேளை சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவ சந்தேகநபரெனவும் இந்தியா செல்லமுடியாதெனவும் தன் தொடர்பில் பொய்ப்பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்ததாகவும் டக்ளஸ் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி கோத்தவுடனான சந்திப்பின் போது தனது அமைச்சு நியமனம் தொடர்பில்  இந்திய பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டதாக தான் அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார். 

இதேவேளை இந்திய தூதரகத்தின் புதுவருட அன்பளிப்புக்கள் வீடு தேடிவந்து அரசியல்தலைவர்களிற்கு கிட்டிவருகின்றது.அதன் ஒரு அங்கமாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இல்லத்திற்கு சென்ற யாழ் இந்திய துணைதூதுவராலய அதிகாரி பாலச்சந்திரன் நட்பு ரீதியாக கலந்துரையாடி புதுவருட வாழ்த்தினை தெரிவித்ததுடன் அன்பளிப்பினையும் வழங்கிச்சென்றதாக தவராசாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments