அரச மரக்கன்றுடன் கோத்தாவை சந்திக்க போகின்றேன்!சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை, நாளை (11) நடைபயணமொன்றை  ஆரம்பிக்கவுள்ளதாக, போரால் பாதிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, வி.சகாதேவன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நடைபயணத்தை, கடந்த காலத்தை நினைவூட்டும் விதமாகவும் தற்போதைய அரசாங்கத்திடம் சமாதான செய்தியை அறிவிப்பதற்காகவும் ஒரு உயிருள்ள அரச மரக்கன்றுடன் ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

நாளை பௌர்ணமி புதன்கிழமை மாதகலில் சங்கமித்தை  வந்திறங்கியதாக பௌத்தர்கள் சொல்லிக்கொள்ளும் ஜம்பு கோள பட்டினத்திலிருந்து இந்நடை பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தன்னால் எடுத்து செல்லப்படவுள்ள அரச மரத்தையும் நடைபயணத்தின் போது மக்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளையும் புதிய ஜனாதிபதி கோத்தபாயவிடம் கையளிக்கவுள்ளதாகவும் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

No comments