ஈஸ்டர் தாக்குதல்; முக்கிய சாட்சியம் பதிவானது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (14) பொலிஸ் அதிகாரிகள் இருவர் சாட்சியமளித்தனர்.

இதன்போது முதலில் வட கொழும்பின் முதலாம் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நிரஞ்சன அபேவர்தன சாட்சியம் வழங்கினார். அவரிடம் ஆணைக்குழு உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு துறையினர் வழங்கிய தகவல் குறித்து அறிந்திருந்தீகளா? என வினவியது.

அதற்கு பதிலளிக்கும் பேது "அவ்வாறான விடயம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அப்போது கொழும்பு வடக்கிற்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டாரவுடன் பேசியதாகவும் அவர் தாக்குதல் குறித்து எனதையும் கூறவில்லை எனவும்" அபேவர்தன சாட்சியமளித்தார்.

பின்னர், அப்போதைய தெமட்டகொட பொலிஸ் நிலையத்தின் உதவி நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.டீ.அனில் ஜயந்த சாட்சியமளித்தார்.

"அவர், நான் ஏப்ரல் 17ம் திகதி முதல் ஐந்து நாட்கள் விடுமுறையில் இருந்தேன். தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கும் எந்தவொரு கடிதமும் தனக்கு கிடைக்கவில்லை. 21ம் மற்றும் 22ம் திகதிகளில் நான் களப்பணிகளில் ஈடுபட்டேன்" எனவும் சாட்சியமளித்தார்.

ஆனால் "அந்த எச்சரிப்பு கடிதம் 21ம் திகதிக்கு முன்னர் கிடைத்தாக தெரிவித்து ஆவணப்படுத்துமாறு பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார தனக்கு ஆலோசனை வழங்கினார்.

அவரின் கோரிக்கையை தான் நிராகரித்தேன். அதற்கு தாக்குதலின் பாரதூர தன்மை தொடர்பில் நான் அறிந்திருந்தமை முக்கியமானது. விசாரணை நடத்தப்பட்டால் நான் மாத்திரம் அதற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்து வைத்திருந்தமையால் அதனை நிராகரித்தேன்.

பொலிஸ் அதிகாரி சஞ்சிவ பண்டார மாத்திரமல்லாமல் அவரது தனிப்பட்ட உதவியாளர் உபேந்திர என்பவரும் குறித்த எச்சரிக்கை கடிதம் 21ம் திகதிக்கு முன்னர் கிடைத்தது போல பதிவு செய்யுமாறு தன்னை அறியுறுத்தியாகவும்" ஜயந்த சாட்சியமளித்தார்.

No comments