தேசிய ரீதியில் வென்ற யுவதி சடலமாக மீட்பு

வவுனியா - கொக்குவெளிப் பகுதியில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று (29) இரவு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி நேற்றைய தினம் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்த போதும் அவர் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளனர்.

இந்த நிலையிலேயே வீட்டு கிணற்றில் மூழ்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவெளி பகுதியை சேர்ந்த சிவானந்தம் சுலக்சனபிரியா (19-வயது) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா காமினி மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுவரும் குறித்த யுவதி அண்மையில் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல்நிலை இடங்களை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments