கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம்

வவுனியா - அம்மிவைத்தான் கிராமத்தில் ஒரு வயது பெண் குழந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை காணமல் போயிருந்த நிலையில், வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் சடலம் அவர்களது வீட்டுக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்த அயலவர்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

No comments