கோர விபத்து இரு உயிர்கள் பலியானது

கிளிநொச்சி - பளை, கரந்தாய் சந்தியில் இன்று (13) மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவ இடத்தில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது எனத் தெரிய வருகிறது.

No comments