சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டு பெரு விழா!

வடமாகான பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்தும் “பண்பாட்டு பெரு விழா” இன்று (13) மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன, சிறப்பு விருந்தினராக வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சி.சுஜீவாவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மாட்டு வண்டில் முன் செல்ல ஊர்வலம் ஆரம்பித்து கலாபூசணம் அப்புச்சி வல்லிபுரம் அரங்கில் நிகழ்வுகள் நடந்தேறின.
இதில் “கிளி மலர்” நூல் வெளியீடும் நடைபெற்றது.
அத்துடன் விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்படி,
  • பொ.வல்லிபுரம்.
  • நா.வேலாயுதம்.
  • சி.யோகராசா.
  • ந.சிவசுப்பிரமணியம்.
ஆகியோருக்கு கலைக்கிளி விருதும்,
  • ந.நிரோசன்.
  • வி.விஜிதவாணி.
  • சி.ஐங்கரன்.
  • வே.நயனீசன்.
ஆகியோருக்கு இளங்கலைஞர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் பல கிராமிய கலை கலாசார நிகழ்வுகளும், மாவட்ட கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments