கடத்தல் குறித்து; சிஐடி கூறும் புதிர்க்கதை

சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பில் காண்பிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிஐடியினர் நேற்று முன்தினம் (12) கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடத்தல் சம்பவம் செயின்ட் பிரிஜ் கொன்வன் பகுதியில் இடம்பெறவில்லை என்பது குறித்த பெண் ஊழியர் வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்ததாக சிஐடி குறிப்பிட்டுள்ளது.

சம்பவமானது கொல்லப்பட்டி பல்மரியா கோர்ட் பகுதியில் இடம்பெற்றதாக குறித்த ஊழியர் (08), (09) சிஐடியிடம் தெரிவித்தார் என அவர்கள் கூறினர்.

சிஐடியின் இதுவரையிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த (இல:20,2/2, பால்மரியா கோர்ட், பல்மரியா அவனியு, கொழும்பு 03) பகுதியில் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றும் சிஐடி தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் சிஐடி தெரிவித்தது.

கடந்த 8ம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யும் போது குறித்த பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் இரண்டு தடவை மயக்கமடைந்து விட்டதாகவும் அதன் காரணமாக விசாரணைகள் முழுமையடையவில்லை என்றும் சிஐடி தெரிவித்தது.

மேலும் குறித்த பெண் ஊழியர் தூதரக வைத்தியர் மற்றும் தூதரக அதிகாரி முன்னிலையிலேயே வாக்குமூலம் அளித்தார் எனவும், மற்றுமொரு தூதரக அதிகாரியை உள்ளடக்கி, பாதிக்கப்பட்ட ஊழியரின் தொலைபேசி விபரங்கள் மூலம் வெளிப்பட்ட இரு தனி நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டியுள்ளது என்றும் சிஐடியினர் அன்றைய தினம் (12) நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

(டெய்லி மிரர் - மொழிபெயர்ப்பு)

No comments