சுவிஸ் தூதரக ஊழியரிடம் தொடர் விசாரணை

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று (10) மூன்றாவது நாளாக சிஐடியில் ஆஜராகியுள்ளார்.

குறித்த சுவிஸ் தூதரக ஊழியர் நேற்று முன் தினம் (08) முதல்முறையாக தனது தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சிஐடியில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் ஊழியரிடம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று நேற்று முன் தினம் மற்றும் நேற்று காலை வரையில் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

அத்துடன் நேற்று (09) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மீண்டும் விசாரணை செய்த சிஐடியினர் 6 மணி நேரம் வாக்குமூம் பெற்றனர்.

முன்னதாக நேற்று (09) மதியம் சிஐடியில் ஆஜராகிய குறித்த ஊழியர் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பெண் சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நேற்று (09) நீதிமன்றம் 12ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments