கோலம் போட்டவர்கள் திடீர் கைது!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சி போராட்டங்கள் நடந்து வருகின்றன.மத்தியில் ஆளும் பாஜக அரசு போராட்டக்காரர்களை தடி கொண்டு தாக்குகிறது, ஆயிரக்கணக்கில் வழக்கு போடுகிறது.
மாணவர்களின் போராட்டத்தை ஒரு வன்முறை போராட்டமாக சித்தரித்து வருகிறது. அரசின் நிலைப்பாட்டிற்கு எதிர்கருத்து சொல்பவர்களை வன்முறையாளராக சித்தரிக்கும் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல, இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.சுயமோட்டோ வழக்காக எடுத்து நாடே தீ பற்றி எரிந்துக்கொண்டிருக்கிற இந்த சூழலில் அரசை கண்டித்து கருத்து சொல்லலாம்.ஆனால் எதையும் உச்சநீதிமன்றம் செய்யவில்லை
எந்த போராட்டம் நடந்தாலும் தடியடி நடத்தி அதை வன்முறையாக சித்தரிக்க காவல்துறையைக் கொண்டு அரசு நடைமுறைபடுத்தி விடுகிறது. இவர்களை தட்டிக் கேட்ட்கும் உரிமை நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது.     

இந்த சூழலில் புது வகை போராட்டமாக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவு செய்து, அமைதியான முறையில்  மாணவிகள் கோலம் போட ஆரம்பித்தனர்
இன்று காலை சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

அமைதியாக நடந்த இந்த எதிர் கருத்து போராட்டத்தை வழக்கம்போல் இதை ஒரு வன்முறை சூழலாக மாற்ற  அடையாறு சாஸ்திரி நகர்  போலீசார் கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர்.  எனினும், சில மாணவிகள் அந்த இடத்தில் இருந்து நகராமல் கோலம் போட்டுக்  கொண்டிருந்தனர்
இதனால், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments