கொழும்பு வாசி யாழில் சடலமாக மீட்பு?

யாழ்ப்பாணம் - புங்கன் குளம் பகுதியிலுள்ள வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை சடலமாக மீட்கப்பட்டவர், கொழும்பு பகுதியை சேர்ந்தவர் (60-வயது) என தெரிவிக்கப்படுகிறது.

காட்டுப்பூச்சி என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இவரை, குடும்பத்தவர்கள் கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து இங்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments