இலங்கை கிரிக்கெட் விருதுகள்

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா இன்று (03) இரவு கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதன்படி குமார் தர்மசேன 2018 மற்றும் 2018ம் ஆண்டுக்கான சர்வதேச நடுவராக தெரிவாகினார்.

ஆண்கள் கிரிக்கெட்

- திமுத் கருணாரத்ன - சிறந்த டெஸ்ட் வீரர்.

- டில்ருவான் பெரேரா - சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்.

- தனஞ்சய டி சில்வா - சிறந்த டெஸ்ட் சகல துறை வீரர்.

- குசல் பெரேரா - சிறந்த ஒருநாள் வீரர்.

- லசித் மாலிங்க - சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர்.

- திசார பெரேரா - சிறந்த ஒருநாள் சகல துறை வீரர்

- திசார பெரேரா - சிறந்த ரி-20 வீரர்.

- லசித் மாலிங்க - சிறந்த ரி-20 பந்து வீச்சாளர்.

- இசுறு உதான - சிறந்த ரி-20 சகல துறை வீரர்.

பெண்கள் கிரிக்கெட் -

- சாமரி அத்தப்பத்து - சிறந்த ஒருநாள் வீராங்கனை.

- ஒஷதி ரணசிங்க - சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர்.

- சாமரி அத்தப்பத்து - சிறந்த ஒருநாள் சகல துறை வீரர்.

- சாமரி அத்தப்பத்து - சிறந்த ரி-20 வீராங்கனை.

- சஷிகலா சிறிவர்த்தன - சிறந்த ரி-20 பந்துவீச்சாளர்.

- சஷிகலா சிறிவர்த்தன - சிறந்த ரி-20 சகல துறை வீராங்கனை.

No comments