போரிஸ் ஜான்சனை அழைக்கும் டிரம்ப் ;

பிரித்தானியாவில் ‘பிரெக்ஸிட்’டை முன்னிலைப்படுத்தி அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சி தனிப்பெரும்பான்மை அமோக வெற்றி பெற்ற நிலையில் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகி உள்ளார். அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற அவர் தீவிர முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்க அதிபர்  டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்பின் இந்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாகவும் அமெரிக்க பயணத்துக்கான தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

No comments