கடலில் மிதந்த நிலையில் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பாலமுனை கடற்கரைப் பகுதியில் மிதந்த நிலையில் காணப்பட்ட சடலமே காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 45 வயது மதிக்கத்தக்கது எனவும், வெளிநாட்டவர் ஒருவரின் சடலமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

குறித்த சடலம் குறித்த உடல்கூறு ஆய்வுகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments