பாரதியாரின் ஜனன தினம்

மகாகவி பாரதியாரின் 133ஆவது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.
யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூரிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை)  காலை  இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்தோடு பாரதியார் பாடலும் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவர் கே.பாலச்சந்திரன், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

No comments