51 ஆமைகளுடன் ஒருவர் கைது!

மதுரங்குளி- விருதோடைப் பகுதியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த (இந்தியன் நட்சத்திர) வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments