சம்பிக்கவுக்கு பிணை! சாரதிக்கு சிறை!

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (24) காலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த விபத்து சம்பவத்தில் தொடர்புடைய சம்பிக்க ரணவக்கவின் சாரதியான துஷித குமார பெரேரா என்பவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை ஜனவரி மாதம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments