மத்திய வங்கி ஆளுநர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் 15வது ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி இன்று (24) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் பிரபல பொருளியலாளரான லக்ஷ்மன், 1994 - 1999ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றியிருந்தார்.

அத்தோடு கல்வித்துறைக்காக அவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில், 2005ம் ஆண்டு பேராசிரியர் லக்ஷ்மனுக்கு தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டது.

No comments