இளைஞன் மீது தாக்குதல்

வவுனியா - பன்றிக்கொய்த குளத்தில் இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நயினாமடுவில் வசிக்கும் மனோகரன் டிலக்சன் என்ற 24 வயதுடைய இளைஞனே இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

பன்றிக்காெய்த குளத்தில் உள்ள தனது காணியில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு உணவு உண்பதற்காக கடைக்கு சென்ற சமயத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணிக்குள் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியும் சேதமாக்கப்பட்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ள இளைஞன், தனது காணிக்கான எல்லைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள நபரொருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

No comments