கோத்தா பெயரை கூறி மிரட்டல்; இராணுவ வீரர் கைது

ஜனாதிபதியின் ஆலோசகர் எனத் தெரிவித்து மொறட்டுவ பிரபல வித்தியாலயத்தின் அதிபர் ஒருவரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (27) நண்பகல் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் ஆலோசகர் என்று ஏமாற்றி அச்சுறுத்தியமை மற்றும் தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். சிரியானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற இவர் இல 11/9 சென் செபஸ்டியன் மாவத்த மொறட்டுவ என்ற முகவரியைச் சேர்ந்தவர்.

இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இந்த நபரை மொறட்டுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments