ரி-20யில் வரலாறு படைத்தாள் அஞ்சலி

பெண்கள் சர்வதேச ரி-20 போட்டியில் ஓட்டங்கள் எதனையும் கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தி நேபாளம் பெண்கள் அணியின் அறிமுக வீராங்கனை அஞ்சலி சாந்த் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இன்று (02) மாலைதீவு பெண்கள் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் 10.1 ஓவரில் மாலைதீவு அணி 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 8 வீராங்கனைகள் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

இதன்போது 2.1 ஓவர்களை வீசிய அஞ்சலி ஓட்டங்களை கொடுக்காமல் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதேவேளை இப்போட்டியில் நோபளம் அணி 5 பந்தில் வெற்றியை பெற்றது.

அஞ்சலி நிகழ்த்திய சாதனை இதுவரை ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டிலும் நிகழ்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments