வவுனியாவில் சாதித்த மாணவன்

வறுமையை காரணம் காட்டி கல்வியை விடாது கற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள வவுனியாவில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற  இராமகிருஸ்ணன் துலக்சன் என்ற மாணவன், பொறியியலாளராகி தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கும் உதவுவதே தனது இலச்சியம் என தெரிவித்துள்ளார்.
நான்கு சகோதரர்களுடன் 6 பேரை கொண்ட குடும்பத்தில் மூத்தவரான இ.துலக்சன் வவுனியா- நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுள்ளார். இம் மாணவன் வவுனியாவின் பின்தங்கிய கிராமமான சாம்பல் தோட்டம் கிராமத்தில் இருந்து சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளான்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர் கொழும்பு மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களில்  வசித்து, மீண்டும் வவுனியாவிற்கு திரும்பி வந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

No comments